/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்: பரிதவிக்கும் நான்கு குழந்தைகள்
/
கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்: பரிதவிக்கும் நான்கு குழந்தைகள்
கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்: பரிதவிக்கும் நான்கு குழந்தைகள்
கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்: பரிதவிக்கும் நான்கு குழந்தைகள்
ADDED : நவ 25, 2025 04:16 AM
வேடசந்துார்: கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசால் குழந்தைகள் நான்கு பேர் பரிதவிக்கின்றனர்.
வேடசந்துாரை சேர்ந்தவர் வைஷ்ணவி 22. தாய் மாமனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது ஊரில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா 24, வந்துள்ளார். இவருக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர்.
விழாவில் சந்தித்து கொண்ட இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நட்பாகி அலைபேசி பேச்சால் நட்பு காதலாக மாறியது.
இருவரும் அவரவர் வீட்டை விட்டு திருப்பூர் சென்று தனியாக குடும்பம் நடத்தினர். பெண்ணின் தாயார் வேடசந்துார் போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான தனிப்படை இருவரையும் அழைத்து வந்து வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தனர்.
எஸ்.ஐ. ஜெயலட்சுமி நடத்திய விசாரணையில் இளம்பெண் தனது கள்ளக்காதலருடன் தான் செல்வேன் என கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.
திருமணம் ஆகாத திருமண வயதுடைய இருவர் இதேபோல் திருமணம் செய்து கொண்டு பிரியாமல் சேர்ந்துதான் வாழ்வோம் என்றால் சேர்த்து வைக்கலாம்.
ஆனால் திருமணமான இவர்களுக்கு தலா இரு குழந்தைகள் உள்ள நிலையில் சேர்ந்துதான் வாழ்வோம் என்றால் போலீசார் அவர்களுக்கு முறையான அறிவுரை கூறி கண்டிக்க வேண்டும். அல்லது பிரித்து அனுப்பி இருக்க வேண்டும்.
அதை விடுத்து அவர்களை சேர்ந்து வாழுங்கள் என அனுப்பி வைத்ததால் இவர்களது நான்கு குழந்தைகள் பரிதாபத்திற்கு ஆளாகி உள்ளனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் போலீசாருக்கு குடும்பம் சார்ந்த பிரச்னைகளில் முடிவெடுப்பது குறித்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

