ADDED : ஜூலை 16, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரி நிறுவனர் பத்மபூஷன், டாக்டர் ஜேக்கப் செரியனின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் டாக்டர் டாம் செரியன் தலைமை வகித்தார்.
காக்நிசன்ட் நிறுவனம் பாலகுமார் தங்கவேலு பேசினார். 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லுாரி ஆலோசகர் டாக்டர் பி.டி.ராஜன் ,கல்லுாரி முதல்வர் எம்.கே.தினகரன் கலந்து கொண்டனர்.