தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நீர்வரத்தில்லா குளங்கள்

நீர்வரத்தில்லா குளங்கள்

நீர்வரத்தில்லா குளங்கள்


ADDED : அக் 22, 2025 08:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழையின்றி குளங்களுக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் விருப்பாச்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம், சிறு குளங்கள் பல உள்ளன. ஒட்டன்சத்திரம் பகுதியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இருப்பினும் மேலே கூறப்பட்ட நீர்நிலை களுக்கு இன்னும் தண்ணீர் வரத்து ஏற்படவில்லை. மழையினால் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தின் மூலம் குளங்களுக்கு நீர் வரத்து ஏற்படும். மேலும் பரப்பலாறு அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரைக் கொண்டு குளங்கள் நிரம்புவது வழக்கம்.

பரப்பலாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. அணையின் நீர் தேக்கும் உயரம் 90 அடியாகும். தற்போது நீர்மட்டம் 65அடியாக உள்ளது.

காட்டாற்று வெள்ளம் ஏற்படாமலும் அணை நிரம்பி மறுகால் செல்லாமலும் உள்ளதால் குளங் களுக்கு நீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us