/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2026 06:21 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப் பட்டது.
நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தில் 72 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. என்.பி.ஆர்., கல்விக்குழும திட்டமிடல் ,மேம்பாடு இயக்குனர் ஆனந்த், மாணவர், பெரு நிறுவன இயக்குனர் அருணா செந்தில்குமார், என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள்,கலை,அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன்,நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி,துணை மருத்துவ படிப்பு கல்லுாரி முதல்வர் ரேமுகி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு மாடுகள் வரவழைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
வேடசந்தூர் : வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அரசு தலைமை மருத்துவர் லோகநாதன் தலைமை வகித்தார்.
உதவி மருத்துவர்கள் சிராஜூதீன், தீரன் சக்கரவர்த்தி, பிரீத்தா, செவிலியர்கள் பழனியம்மாள், செந்தில் அரசி, மருந்தாளுநர் தங்கராஜ் பங்கேற்றனர்.
நவாமரத்துப்பட்டி ஸ்ரீ சாய்பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுக்களும் நடைபெற்றன.
உறி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. கல்லூரி நிர்வாக அலுவலர் ஸ்டாலின், மேலாளர் ராமேஸ்வரி, கல்விப் பொறுப்பாளர் பிரான்சிஸ், கல்லூரி முதல்வர்கள் சாந்தி, ஜான் வின்சென்ட், துணை முதல்வர்கள் ஜென்சி உமா, நந்தியா பங்கேற்றனர்.
திண்டுக்கல் : லேந்தர் தொண்டு நிறுவனம் ஆதரவற்ற வீடற்றோர் காப்பகத்தில் தி.மு.க., முன்னாள் வார்டுசெயலாளர் சாகுல்ஹமீது தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தொண்டு நிறுவனஇயக்குனர் காளீஸ்வரன், திட்ட மேலாளர் சங்கர், காப்பக காப்பாளர் சத்யா, முதியோர்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி' தனியார் மண்டப சாலை விநாயகர் கோயில் முன்பு நடந்தது. மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மண்டல் தலைவர் சுந்தரி தலைமை வகித்தனர். பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் பா.ஜ.வினர் 51 பானைகளில் கூட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடினர். பொதுச் செயலாளர்கள் சந்திரசேகர், ஆனந்தி, நிர்வாகிகள் ஜோதிலிங்கம், லோகேஸ்வரன் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் ரெட்டியப்பட்டி பாப்பு நகரில் உள்ள திரு இருதய கலை அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலர் ஜேசுதாஸ், முதல்வர் ஹேமலதா தலைமை வகித்தனர். பாரம்பரிய உடை அணிந்து, ஒவ்வொரு துறை வாரியாக மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதையொட்டி உறி அடித்தல், லக்கி கார்னர் விளையாட்டு போட்டிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பழநி : கடைவீதியில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகரமைப்பு அலுவலர் தன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், கணக்காளர் சரவணன், வருவாய் அலுவலர் விஜய் பால்ராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராம்ஜி, உதவியாளர் அருள்முருகன் கலந்து கொண்டனர்.

