/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொன்காளி, மகாமுனி கோயில் திருவிழா
/
பொன்காளி, மகாமுனி கோயில் திருவிழா
ADDED : ஜன 19, 2026 06:36 AM

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் பொன்காளியம்மன், மகாமுனி கோயிலகள் அமைந்துள்ளன. இங்கு நடந்த கைத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோயில் வீட்டில் இருந்து அம்மன், மகாமுனி நகைப்பெட்டி மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. பின் கணபதி ஹோமம், யாக பூஜைகள் நடந்தன. பின் பொன்காளி அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டன. அன்னதானம் நடந்தது. கிடா, சேவல்கள் பலி கொடுக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. கோம்பைபட்டி, கே.அய்யாபட்டி, செடிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

