தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் மூவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் மூவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் மூவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்


UPDATED : அக் 21, 2026 11:38 PM

ADDED : அக் 21, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 11:38 PM ADDED : அக் 21, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த மூவருக்கு வனத்துறையினர் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கிடிஜாலா உத்தரவின்பேரில் திண்டுக்கல் மேற்கு வட்டம் பொன்னிமாந்துறை பகுதியில் சிறுமலை வன அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த மூவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த பையில் இரண்டு கிலோ காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது.

இறைச்சி, டூவீலரை பறிமுதல் செய்த வனத்துறையினர், மூவரையும் மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் பொன்னிமாந்துரை மணிகண்டன் 28, பூபதி ராஜா 23, சவரிமுத்து 27 என்பதும், குடகனாற்று பகுதியில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை வெட்டி எடுத்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us