ADDED : ஜன 30, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஜி.டி.எஸ்., ஊழியர்களை டார்கெட் என்ற பெயரில் தினந்தோறும் லாகின்டே என எட்டமுடியாத இலக்கினை நிர்ணயித்து மன உளைச்சல் ஏற்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். கோட்ட கண்காணிப்பாளரின் ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும் என்.எப்.பி.இ., எப்.என்.பி.ஓ., பி.பி.இ.எப்., ஏ.ஐ.ஜி.டி.எஸ்.யு., என்.யு.ஜி.எஸ்., போன்ற அமைப்புகளின் அஞ்சல் கூட்டுப்போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகி திருமலைசாமி தலைமை வகித்தார். மைக்கேல் சகாயராஜ், கருப்பையா  முன்னிலை வகித்தனர்.   மாநில நிர்வாகிகள் விஷ்ணுவர்தன், செல்வன், சுகுமாறன், முத்தையா  கலந்து கொண்டனர்.

