ADDED : ஆக 21, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், ஆக.22-
கொடைக்கானல் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இம்மலைப்பகுதியில் சில மாதத்திற்கு முன் ஏராளமான ஏக்கரில் உருளைக்கிழங்கு நடவு செய்யப்பட்டன. தற்போது அறுவடை பருவத்தை எட்டிய நிலையில் 80 சதவீத மகசூல் பாதித்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். விளைச்சல் பாதிப்பால் விலையுயர்வு சற்று ஆறுதலை அளித்துள்ளது. உருளைக்கிழங்கு மதுரை, திருச்சி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 45 கிலோ மூடை தற்போது ரூ.1500 வரை விலை கிடைக்கிறது.
விவசாயி ஒருவர் கூறுகையில், ‘விதை கிழங்கு ஒரு மூடைக்கு ரூ.5 ஆயிரம் செலவு செய்து நஷ்டமடைந்துள்ளோம். எதிர்பார்த்த மழையின்றி விவசாயம் பாதித்தது. 80 சதவீத மகசூல் பாதித்துள்ளது. கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்’ என்றார்.
