ADDED : ஆக 23, 2026 12:39 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய மழையின்றி உருளைக்கிழங்கு விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் சில மாதத்திற்கு முன் ஏராளமான ஏக்கரில் உருளைக்கிழங்கு நடவு நடந்தது. தற்போது அறுவடை பருவத்தை எட்டிய நிலையில் போதிய மழை இல்லாததால் 80 சதவீத மகசூல் பாதித்துள்ளது.
விவசாயிகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். விளைச்சல் பாதிப்பால் விலையுயர்வு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இப்பகுதியில் விளையும் உருளைக்கிழங்கு மதுரை, திருச்சி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 45 கிலோ மூடை தற்போது ரூ.1500 வரை விலை கிடைக்கிறது.விவசாயி ஒருவர் கூறுகையில், 'விதை கிழங்கு ஒரு மூடைக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்தோம். எதிர்பார்த்த மழையின்றி 80 சதவீத மகசூல் பாதித்துள்ளது. கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்' என்றார்.
