ADDED : ஜன 24, 2024 06:11 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நந்தீஸ்வரர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முள்ளிப்பாடி திருகாமேஷ்வரர் கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உட்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கன்னிவாடி கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், மஞ்சள்நீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தருமத்துப்பட்டி மல்லேஸ்வரர் கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் பிரதோஷ அபிஷேகம் நடந்தது.

