ADDED : ஏப் 15, 2026 11:15 PM

வடமதுரை:பிரதோஷத்தையொட்டி வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர், நந்திக்கு சந்தனம், இளநீர், பன்னீர், பால், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன், எரியோடு சாய்பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பழநி: பழநி முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பாதவிநாயகர் கோயில் அருகே சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், அ.கலையம்புத்துார் கைலாசநாதர் கோயில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மூலவர், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது.
சிறுமலை சிவசக்தி அம்மன் கோயில், அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், காம்பார்பட்டி 1008 சிவன் கோயில், கணவாய்பட்டி சிவன் கோயில், குட்டூர் அண்ணாமலையார் கோயில்களில் மூலவர், நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
