ADDED : டிச 24, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. செயலாளர் நேச சவுந்தரம் தலைமை வகித்தார். முதல்வர் சிறுமலர் வரவேற்றார். ஜி.டி.என்., தாளாளர் ரத்தினம் பேசினார்.
மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. துபாயில் நடந்த ஆசிய பாரா இளைஞர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்த்துறை மாணவி லின்சியா கவுரவிக்கப் பட்டார். சவேரியார்பாளையம் பாதிரியார் ஜெபாஸ்டின் ஜேக்கப், கவுன்சிலர்கள் அமலோற்பவ மேரி, வசந்தி கலந்துக்கொண்டனர்.

