ADDED : ஆக 15, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.16-
மாவட்டத்தில் வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி பழநியில் சிறப்பு தொழுகை நடந்தது.
பழநி ஜமாத்தார் சார்பில் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சண்முகநதி ஈத்கா மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கு மழை பொழிய வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். பழநி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
