UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:56 PM
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில், வன்னி விநாயகர் கோயிலில் வருண ஜெபம், யாகம் நடந்தது.
தமிழ்நாடு பிராமண ஸமாஜ மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமை வகித்தார். வன்னி விநாயகர் கோயிலில் நடந்த வருண ஜெபத்தில் ஐந்து பிராமணர்கள் தண்ணீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஓதினர். அதன் பின் அஷ்டதிக் பாலர்கள், நவகிரகங்களுக்கான கலச பூஜை நடந்தது. நாதஸ்வரத்தில் அமிர்தவர்ஷினி ராகம் இசைக்கப்பட்டது. ஒதுவா மூர்த்திகள் மழைக்கான பாடலை பாடி, யாக பூஜை துவங்கியது. யாக பூஜை நடந்த பின் வன்னி விநாயகர் கோயில் கர்ப்ப கிரகத்தில் தண்ணீர் நிரப்பி ஜல விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. யாக ஏற்பாடுகளை வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் செய்தனர். நிகழ்ச்சியில் சுந்தரேச குருக்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
