ADDED : செப் 09, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், செப்.10-
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தட்டைப்பயறு விலை அதிகரித்து கிலோ ரூ.32க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம், வடகாடு, கண்ணனுார், கோமாளிபட்டி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தட்டைப்பயறு அதிகம் விளைவிக்கப்படுகிறது. அறுவடை செய்யப்படும் தட்டைப்பயறு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது. அப்போது கிலோ தட்டைப்பயறு ரூ.20க்கு விற்றது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் விலை ஏற்றமடைந்து வருகிறது. நேற்று கிலோ தட்டைப்பயறு ரூ.32க்கு விற்றது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், ‘வரத்து குறைவு காரணமாக தட்டைப்பயறு விலை அதிகரித்து வருகிறது’ என்றார்.
