ADDED : அக் 23, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை சுற்றுப்பகுதிகளில் புடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. புரட்டாசியை முன்னிட்டு சைவம் உண்பவர்கள் அதிகமாக இருந்ததால் 10 நாட்களுக்கு முன்பு கிலோ புடலங்காய் ரூ. 30 க்கு விற்பனையானது. ஐப்பசி பிறந்து சில நாட்கள் ஆன நிலையில் தீபாவளியும் வந்ததால் அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
இதனால் வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்யும் அளவை குறைத்து விட்டனர். இதையொட்டி விலையும் சரிவடைந்தது. இதன் காரணமாக கிலோ ரூ. 30க்கு விற்ற புடலங்காய் விலை குறைந்து கிலோ ரூ.8 க்கு விற்றது.