தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அவரை விலை உயர்வு

அவரை விலை உயர்வு

அவரை விலை உயர்வு


ADDED : செப் 21, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், செப்.22-

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அவரைக்காய் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.65க்கு விற்பனை ஆனது.

ஒட்டன்சத்திரம், வடகாடு, கண்ணனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அவரைக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த வாரத்திற்கு முன்பு பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. அப்போது அவரைக்காய் கிலோ ரூ.45 க்கு விற்பனை ஆனது.

தற்போது அறுவடை குறைந்துள்ள நிலையில் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் விலை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று அவரைக்காய் கிலோ ரூ.65க்கு விற்பனை ஆனது.

இனிவரும் நாட்களில் வரத்து குறையும் என்பதால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us