/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.ஐ.ஆர்., குறித்து பாடல் மூலம் தலைமையாசிரியர் விழிப்புணர்வு
/
எஸ்.ஐ.ஆர்., குறித்து பாடல் மூலம் தலைமையாசிரியர் விழிப்புணர்வு
எஸ்.ஐ.ஆர்., குறித்து பாடல் மூலம் தலைமையாசிரியர் விழிப்புணர்வு
எஸ்.ஐ.ஆர்., குறித்து பாடல் மூலம் தலைமையாசிரியர் விழிப்புணர்வு
ADDED : நவ 22, 2025 12:23 AM

கொடைரோடு: தமிழகத்தில் நடக்கும் (எஸ்.ஐ.ஆர்.,) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என பாடல் மூலம் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அம்மைநாயக்கனுார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டை பெற்றுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணிக்காக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை நிரப்புவதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடைரோடு அருகே உள்ள அம்மைய நாயக்கனுார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்புவது தொடர்பான பணிகளை பாடலாக பாடி விழிப்புணர்வு ஏற் படுத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை
பார்த்து வாங்குங்க...
ஆவணங்கள் கையில் வைத்து
நிரப்பிக் கொள்ளுங்கள்...
பிறந்த தேதி, ஆதார் எண்
எழுத வேணும்ங்க...
மொபைல் எண்ணை பிழை இன்றி
எழுதி கொள்ளுங்கள்....
2002ல் ஓட்டளித்திருந்தால்
இடது பக்கமும்...
ஓட்டு அளிக்காவிட்டால்
வலது பக்கமும்....
விவரங்களையும் பூர்த்தி
செய்ய வேண்டும்....
இதுபோன்ற வரிகளுடன் பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்காக தலைமையாசிரியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

