தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள்

அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள்

அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள்


UPDATED : ஜூன் 30, 2026 10:58 PM

ADDED : ஜூன் 30, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 10:58 PM ADDED : ஜூன் 30, 2026 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு:உசிலம்பட்டி வழித்தடத்தில் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதாக பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வத்தலகுண்டு உசிலம்பட்டி வழித்தடத்தில் சின்னுபட்டி, கண்ணாபட்டி, செக்காபட்டி, விருவீடு, உத்தப்பநாயக்கனுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ்கள் நேரத்தை முறையாக கடைபிடிப்பதில்லை. அதிவேகத்தில் பஸ்களை இயக்கி பயணிகளை அச்சத்திற்கு ஆளாக்கி வருகின்றனர்.

உசிலம்பட்டிக்கு தனியார் பஸ் அதிவேகத்தில் சென்றதால் பயணிகளுக்கும் கன்டக்டர், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகளின் கூச்சலை காதில் வாங்காமல் டிரைவர் பஸ்சை அதிவேகத்துடன் ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தார்.

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு துறை அதிகாரிகள் அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்காணித்து அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us