/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நவீன வேளாண் கருவிகள் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு
/
நவீன வேளாண் கருவிகள் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு
ADDED : நவ 07, 2025 04:30 AM
திண்டுக்கல்: வேளாண்மை, உழவர் நலத்துறை மூலம் நவீன வேளாண் கருவிகள், வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்புக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ. 2.5 லட்சம், 2ம் பரிசாக ரூ. 1.5 லட்சம் 3ம் பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பங்குபெற விரும்பும் விவசாயிகள், தங்களது பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
பங்கேற்பாளர் தனது சாதனை குறித்த விளக்கம் மற்றும் விவரங்களுடன், மாவட்ட அளவிலான குழுவிடம், செயல்விளக்கங்கள், இயந்திரங்கள், புகைப்படம் , வீடியோ போன்றவற்றுடன் விளக்க வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

