ADDED : மார் 08, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: என்.சி.சி.,யில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடந்தது. திண்டுக்கல் 14வது தமிழக பட்டாலியன் 2ம் இடம் பிடித்தது.
சிறந்த அதிகாரியாக திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லூரி என்.சி.சி., அதிகாரி கேப்டன் பாண்டீஸ்வரன், சிறந்த ராணுவ வீர பயிற்சியாளராக சுபேதார் சந்திரசேகர், சிறந்த ட்ரெய்னிங் கிளார்க்காக அழகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
