தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மின் வழித்தடங்களை முறையாக...  பராமரிக்கலாமே :குறைந்த மின்னழுத்தத்தை போக்க

மின் வழித்தடங்களை முறையாக...  பராமரிக்கலாமே :குறைந்த மின்னழுத்தத்தை போக்க

மின் வழித்தடங்களை முறையாக...  பராமரிக்கலாமே :குறைந்த மின்னழுத்தத்தை போக்க


ADDED : ஏப் 15, 2026 08:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்:கோடைகாலத்தை முன்னிட்டு மின்தடையை தவிர்க்க மின்பாதைகளை முறையாக பராமரிப்பு செய்வதுடன் தேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோடைகாலத்தில் அதிக மின் நுகர்வு காரணமாக மின்னழுத்த குறைவு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவது உண்டு. இதற்கு காரணம் மின்கம்பங்கள், மின்பாதைகள் போதிய பராமரிப்பின்றி இருப்பது தான்.

பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இன்னும் பல இடங்களில் மின் கம்பிகள், மின்மாற்றிகளை சுற்றி செடிகள் முளைத்து மின் கம்பியை தொட்டப்படி உள்ளது. இதனால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் மின்பாதை செல்லும் இடங்களில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால் மின்னழுத்த குறைவு ஏற்படுகிறது. இதனால் மின் சாதனங்கள் பழுதடைவதும் உண்டு. அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த போதிலும் இன்னும் கிராம பகுதிகளில் கூடுதல் அக்கறை செலுத்தி சேதம் அடைந்த மின் மாற்றிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.......

தடையற்ற மின்விநியோகம் தேவை

மின்கம்பிகள் செல்லும் பாதையை முறையாக பராமரித்தாலே மின்தடை ஏற்படாமல் இருக்கும். தாழ்வாக உள்ள மின்கம்பிகள் பலத்த காற்று வீசும் போது ஒன்றொடொன்று உரசி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். மின் அழுத்தத்திற்கு ஏற்ப மின்மாற்றிகளின் திறனை மேம்படுத்த வேண்டும். கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகமாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மின்தடை ஏற்படும் நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து இரவு நேரத்தில் சரிவர துாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கோடைகாலத்தில் தடையின்றி மின் விநியோகம் செய்வதற்கு ஏற்ற வகையில் மின்மாற்றிகள் மின்கம்பங்களை சரி செய்து வைத்து கொள்வது அவசியமாகிறது .

- ஜெயக்குமார் ,பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர், ஒட்டன்சத்திரம்.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us