/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., மாவட்ட தலைவர் கைதை கண்டித்து போராட்டம்
/
பா.ஜ., மாவட்ட தலைவர் கைதை கண்டித்து போராட்டம்
ADDED : ஜன 06, 2025 03:40 AM

பழனி: மதுரையில் ஜன., 3ல் நடந்த பா.ஜ., ஊர்வலத்தில் பங்கேற்க சென்ற பா.ஜ., மகளிர் அணியினரை, பழனியில் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை காண பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கட்சியினருடன் சென்றார்.
மண்டபம் அருகே இருந்த தனியார் பாரில் நுழைந்து, 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருவதாக குற்றஞ்சாட்டினார். பார் ஊழியர்களை மிரட்டியாக கனகராஜ் உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பழனி, தேக்கம்தோட்டம் செக் போஸ்ட் அருகே கனகராஜ், பொதுச்செயலர் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதை கண்டித்து பழனி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ.,வினர் திரண்டனர்.
கைதானவர்களை விடுவிக்க கோரி முற்றுகை, மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, குண்டு கட்டாக வாகனத்தில் ஏற்றினர்.
இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

