ADDED : பிப் 07, 2026 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசு அறிவித்த மே மாதம் முழுவதும் விடுமுறை என்ற கோரிக்களை தவிர பணப்பலன் வழங்கக்கூடிய 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என கோரி கண், காது, வாய்களை கறுப்பு ரிப்பன் துணியால் கட்டியப்படி கும்பியடித்தப்படி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டப் பொறுப்பாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் இந்திரா முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பாமிதாபானு, செயலாளர் மகாலட்சுமி போராட்டத்தில் பேசினர்.

