ADDED : ஜன 06, 2026 06:08 AM

வடமதுரை: வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்று கேட்டவர்கள் பல மாதங்களாகியும் கிடைக்காத நிலையில் தர்ணா போராட்டம் நடத்தினர்
இந்த அலுவலகத்திற்கு 15 ஆண்டுகளாக நிரந்தர சார் பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிபவர்களே மாற்று பணியாக வருவதும், செல்வதுமாக உள்ளனர்.
இதனால் வில்லங்க சான்று வழங்காமல், சிக்கல் மிகுந்த விஷயங்களில் சரியான முடிவு எடுக்காமல் கிடப்பில் விடப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒருவருக்கு விடுமுறை நாளில் பணிபுரிந்து வில்லங்க சான்று தயார் செய்து தந்தனர். மாதம், ஆண்டுக்கணக்கில் வில்லங்க சான்று பெற முடியாமல் இருப்பவர்கள் இதையறிந்து ஆவேசமாகினர்.
இவர்கள் நேற்று அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டம் நடத்தி சார்பதிவாளர் ராமசந்திரனிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களுள் மூர்த்தி தீக்குளிக்க போவதாக தெரிவித்ததால் பதட்டம் அதிகரித்தது. இதையடுத்து அங்கு வந்த வடமதுரை போலீசார் மனுதாரர்களுடன் நீண்ட நேரம் பேசி போராட்டத்தை கைவிட செய்தனர்.

