ADDED : ஜூலை 31, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : நான் முதல்வன்    உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் மூலம் உயர்கல்வி உதவித்தொகை வழங்கவும், கட்டணச் சலுகை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான விழா   திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியசாமி முதல் கட்டமாக 111 மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான உயர் கல்வி உதவித்தொகை , கட்டணச்சலுகை ஆணைகளை வழங்கினார்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, உதவி கலெக்டர் (பயிற்சி) வினோதினி பார்த்திபன், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி  கலந்துகொண்டனர்.

