தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பொதுத்தேர்வு பெயர் பட்டியல் பணி துவக்கம்

பொதுத்தேர்வு பெயர் பட்டியல் பணி துவக்கம்

பொதுத்தேர்வு பெயர் பட்டியல் பணி துவக்கம்


ADDED : ஜன 05, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியை கல்வித்துறை அதிகாரிகள் துவக்கினர்.

மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 245 அரசு பள்ளிகளிலிருந்து 80 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதன் தேர்வு மார்ச்சில் நடக்கிறது. இதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்தும் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுத்தேர்விற்கு 2 மாதங்களே இருப்பதால் கல்வித்துறை அதிகாரிகள் 10, 11, 12ம் பொதுத்தேர்வு மாணவர் பெயர்பட்டியல் தயாரிப்பது, செய்முறை தேர்வு உள்ளிட்ட பணிகளை துவக்கி உள்ளனர். இதுமட்டுமின்றி 10, 11, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களும் ஜன.10 வரை பெற்று கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us