/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் பொதுக்கூட்டம் மாநாடுகளை தவிர்க்கலாமே
/
ரோடுகளில் பொதுக்கூட்டம் மாநாடுகளை தவிர்க்கலாமே
ADDED : டிச 11, 2025 05:22 AM

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திண்டுக்கல் மணிக்கூண்டு, நாகல்நகர், பஸ் ஸ்டாண்ட், ஒட்டன்சத்திரம் - கள்ளிமந்தையம் ரோடு, பழநி ரவுண்டானா, ரயில்வே ஸ்டேஷன் ரோடு தொடங்கி வத்தலக்குண்டு, செம்பட்டி, கொடைக்கானல், வேடசந்துார், வடமதுரை, நத்தம் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் அரசியல் கட்சியினர் ,அமைப்பினரின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது வழக்கமாக உள்ளது.
பெரும்பாலும் இதுபோன்ற இடங்களுக்கே போலீசாரும் அனுமதி வழங்குகின்றனர். இந்த இடங்கள் மிகவும் குறுகலாக உள்ளன. முன்பு மக்களைத் திரட்டும் பெரிய கூட்டங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பொதுமக்களுக்கு இடையூறின்றியே கூட்டப்பட்டன. ஆனால் தற்போது கூட்டத்தை அடர்த்தியாக காட்ட வேண்டுமென மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

