/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து இடையூறு பழநியில் அவதிப்படும் பொதுமக்கள்

ADDED : டிச 15, 2025 05:53 AM
பழநி: பழநி அடிவாரம், நகர்பகுதிகளில் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களுக்கான முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பழநியில் ஆர்.எப் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு அருள்ஜோதி வீதி, திருவள்ளுவர் சாலை ஆகிய பகுதிகளில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் ரோடுகளின் இருபுறமும் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாராபுரம் ரோடு, ஆர்.எப் ரோட்டையும் இணைக்கும் ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்து இடையூறு அதிகரிக்கிறது இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பழநி கோயிலுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இலவச சுற்றுலா வாகன நிறுத்தங்களின் போதிய இடம் இல்லை. இதனால் அருள் ஜோதி வீதி, ஆண்டவர் பூங்கா ரோடு, திருஆவினன்குடி கோயில் அருகே, ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். எனவே, பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.