/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது
/
புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது
புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது
புதுச்சேரி மதுபானம் கடத்தி விற்பனை போலீஸ்காரர் உட்பட 2 பேர் கைது
ADDED : ஜன 06, 2025 03:28 AM

திண்டுக்கல்: புதுச்சேரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்த சென்னை போலீஸ்காரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நத்தம் பண்ணுவார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் 36. சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் போலீசாக உள்ள இவர் புதுச்சேரியிலிருந்து 129 மது பாட்டில்களை வாங்கி உறவினரான நத்தம் பண்ணுவார்பட்டியை சேர்ந்த அழகுபாண்டியிடம் 41, விற்பனை செய்வதற்காக காரில் அங்கு கொண்டுவந்தார். இதன் பின் டூவீலரில் மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு அழகுபாண்டியிடம் கொடுத்தார்.
அப்போது திண்டுக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்.ஐ.,ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புதுச்சேரி மது பாட்டில்கள், டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.