UPDATED : ஆக 05, 2026 08:45 PM
ADDED : ஆக 05, 2026 08:31 PM
வடமதுரை:அய்யலுார் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பஞ்சந்தாங்கி செல்லும் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. நேற்று மாலை இப்பகுதியில் ஆடி மாதத்திற்கே உரிய வகையில் காற்று பலமாக வீசி கொண்டிருந்தது. 4:45 மணிக்கு மதுரை சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் செல்வதற்காக ரயில்வே கேட்டை மூடும் பணி நடந்தது. அப்போது ஏற்கனவே சிறிது பலமிழந்து இருந்த ஒரு பக்கத்தின் இரும்பு கேட் பீம் முறிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக டூவீலர் ஏதும் அவசர கதியில் ரயில்வே கேட்டை கடக்க முயற்சிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்த அவசர கால ரயில் கேட்டை பயன்படுத்தி ரோடு போக்குவரத்தை நிறுத்தி ரயில்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ரயில்வே பொறியியல் பிரிவு ஊழியர்கள் முறிந்த கேட்டை சீரமைத்தனர்.
