UPDATED : நவ 29, 2026 12:12 AM
ADDED : நவ 29, 2026 12:12 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ம.மு.கோவிலுார் ரோடு ரயில்வே லெவல் கிராசிங் கேட் 5 நாட்கள் மூடப்படுகிறது.
தாமரைப்பாடி – திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே இருக்கும் ம.மு.கோவிலுார் ரோடு ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நவ.,30 முதல் டிச.,4 வரை நடக்கிறது.
இந்த 5 நாட்களும் காலை 8:00 மணி துவங்கி மாலை 6:00 மணி வரை இந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.
வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைகளில் பயணிக்க வேண்டும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
