ADDED : பிப் 27, 2024 06:26 AM

அ நிறம் | அளவு
வடமதுரை : வடமதுரை தாமரைப்பாடி ரயில்வே ஸ்டேஷன் இடையே வேல்வார்கோட்டையில் லெவல்கிராசிங் கேட் இருந்தது.
2023ல் ரூ.2.85 கோடியில்'சப் வே'வாக மாற்றும் பணி துவங்கியது. உள்ளே நீர் தேங்காத வகையில் கூரையுடன் அமைக்கப்பட்ட இதை நேற்று பிரதமர் நரேந்திரமோடி காணொளி மூலம் திறந்து வைத்தார். '
சப் வே' பகுதியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அங்கம்மாள், ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் முன்னிலை வகித்தனர். சீனியர் செக் ஷன் இன்ஜினியர் ரெங்கசாமி வரவேற்றார். வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் ரமா, வேல்வார்கோட்டை ஜமாத் தலைவர் முகமதுநசுருதீன், ஊராட்சி துணைத்தலைவர் நல்லமுத்து பங்கேற்றனர்.
