தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/8 ஆண்டுகளாக நடக்கும் ரயில்வே ‘சப் வே’ பணி

8 ஆண்டுகளாக நடக்கும் ரயில்வே ‘சப் வே’ பணி

8 ஆண்டுகளாக நடக்கும் ரயில்வே ‘சப் வே’ பணி


UPDATED : அக் 27, 2026 04:59 PM

ADDED : அக் 27, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 04:59 PM ADDED : அக் 27, 2026 04:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியோடு: நல்லமனார்கோட்டையில் 8 ஆண்டுகளாக நடக்கும் ரயில்வே ‘சப் வே’ பணி முழுமையாகாதால் பல கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

வடமதுரையில் இருந்து தும்மலக்குண்டு, பி.கொசவபட்டி, திருக்கண், நல்லமனார்கோட்டை, மாரம்பாடி வழியே வேடசந்துாருக்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.

மாயழகனுார், அருப்பம்பட்டி, கே.புதுார், மாரம்பாடி, மூக்கையகவுண்டனுார், சொட்டமாயனுார், சாமிமுத்தன்பட்டி, கோட்டைமந்தை, மாரம்பாடி என பல கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய ரோடு.

இதில் நல்லமனார்கோட்டை அருகில் திண்டுக்கல் கரூர் ரயில் பாதை குறுக்கிடும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டது.

பணி துவங்கி நடந்த நிலையில் நிழற்கூரை பணி 2 மாதங்களாக பாதியில் நிற்கிறது. இதனால் ஒவ்வொரு மழை நேரத்திலும் சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீரை வெளியேற்றும் வரை வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

சுரங்கப்பாதைக்குள் மழைநீர் சேராத வகையில் நிழற்கூரை பணியை முழுமையாக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us