தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாடிய மரங்களுக்கு ஆறுதல் தந்த மழை

வாடிய மரங்களுக்கு ஆறுதல் தந்த மழை

வாடிய மரங்களுக்கு ஆறுதல் தந்த மழை


UPDATED : செப் 08, 2026 07:34 PM

ADDED : செப் 08, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 07:34 PM ADDED : செப் 08, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:வடமதுரை பகுதியில் சமீபத்தில் பெய்த மழையானது வாடி வதங்கிய மரங்களுக்கு பெரிய உதவியாக அமைந்தது.

எல் நினோ, பருவ மாற்றம் போன்ற காரணங்களால் இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் வெயில் கடுமையாக உள்ளது. கடந்த 2 மாதங்களாக வடமதுரை பகுதியில் மழை பெய்யாமல் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருந்தது.

பாசன வசதி இல்லாத இடங்களில் மரங்களின் இலைகள் வாடி வதங்கி விழும் நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தன. குறிப்பாக நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும் மரங்கள் மிகுந்த பாதிப்புடன் காணப்பட்டன.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் செப்.,5 மாலை இப்பகுதியில் லேசான மழை பெய்தது. இதன் பலனாக வாடியிருந்த மரங்கள் புத்துயிர் பெற்றது போல செழுமையாகி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us