/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் நாயோடைக்கு தண்ணீர் வரத்து
/
மழையால் நாயோடைக்கு தண்ணீர் வரத்து
ADDED : அக் 24, 2025 02:45 AM
கன்னிவாடி: தோணிமலையில் பெய்த சாரல் மழையால் கன்னிவாடி நாயோடைக்கு குட்டிக்கரடு, பாம்போடைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. கன்னிவாடி பேரூராட்சி, கசவனம்பட்டி, கோனுார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு இப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த்தேக்கம் போதிய பராமரிப்பின்றி துார்ந்துள்ளது.
மொத்த பரப்பில் 40 சதவீதத்திற்கும் கூடுதலான பகுதிகள் ஆக்கிரமிப்பு விவசாயத்தில் சிக்கி உள்ளன. எல்லைக்கான குறியீட்டு கற்களும் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.
நீர்பிடிப்பு பகுதியில் சில நாட்களாக சாரல் மழை பெய்கிறது. குட்டிக்கரடு, பாம்போடை உள்ளிட்ட நீர்தேக்கத்திற்கான வரத்து வாய்க்காலில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
ஆனால் வழித்தடத்தில் பரவலாக பெரிய பள்ளங்கள் மட்டுமே உள்ள சூழலில் அவற்றில் குட்டை போல் வரத்து தண்ணீர் தேங்குகிறது.

