ADDED : மே 16, 2026 05:58 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று மாலை சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளுகுளு நகரான கொடைக்கானலில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக வீடுகளில் மின்விசிறி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காண அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதன் மழையால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் இதமான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
