ADDED : மார் 28, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்;குளு நகரான கொடைக்கானலில் கோடை வெயிலின் தாக்கம் ருத்ர தாண்டவம் ஆட குளுமை நிறைந்த நகரம் புழுக்கம் அடைந்தது. வழக்கத்திற்கு மாறான வெயிலால் வீடுகளில் மின்விசிறி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அரை மணி நேரம் மிதமான சாரல் மழை பெய்தது. பின் வெயில் பளிச்சிட்டது. சாரல் மழையால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானல் வருகை தந்த பயணிகள் இதமான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சியடைந்தனர்.
