ADDED : ஏப் 08, 2025 04:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. வெயிலால் பகல் நேரங்களில் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 :00 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது.
ஒட்டன்சத்திரம்: சுற்றிய கிராமப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் ரோட்டுப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஒட்டன்சத்திரம் அருகே தாத்தா கவுண்டன் புதூர் பகுதியில் பல ஏக்கரில் பப்பாளி மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்தன. விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 299.60 மி.மீ., மழை பதிவானது.
ஊர் மழையளவு (மி.மீ.,)
திண்டுக்கல் 44
காமாட்சிபுரம் 25.30
நத்தம் 30.50
சத்திரப்பட்டி 54.60
வேடசந்துார் 22
புகையிலை ஆராய்ச்சி நிலையம் 22
பழநி 36
கொடை ரோஸ்கார்டன் 16
பிரையன்ட் பூங்கா 14
