ADDED : ஜூன் 09, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது.
இங்கு சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்று வீசியதால் ஏரிச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி சரி செய்தனர். நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
நேற்று மதியம் வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.
