UPDATED : நவ 28, 2026 09:36 PM
ADDED : நவ 28, 2026 09:34 PM
அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
பேரணி பள்ளியில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதில் பேரூராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
