ராமதாஸ் வேட்பாளர்களால் அ.தி.மு.க., ஓட்டுக்கு வேட்டு
ராமதாஸ் வேட்பாளர்களால் அ.தி.மு.க., ஓட்டுக்கு வேட்டு
ADDED : ஏப் 07, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
ஆத்துார்:ஆத்துாரில் பா.ம.க.,வின் ராமதாஸ் தரப்பினர் களமிறங்குவதால் அ.தி.மு.க.,விற்கான கூட்டணி ஆதரவு ஓட்டுகளுக்கு வேட்டு வைக்கும் நிலை உருவாகி உள்ளது.
ஆத்துார் தொகுதியில் தேசிய, மாநில கட்சிகள் , சுயேச்சைகள் உட்பட 26 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 மனுக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பா.ம.க.,வின் அன்புமணி தரப்பினர் களப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த அணியின் ஓட்டுகளை குறி வைத்து பா.ம.க.,வின் ராமதாஸ் அணியை சேர்ந்த 2 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இவற்றின் தாக்கத்தை சமாளிக்கும் வழிகள் குறித்து அன்புமணி தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர்.
-
