sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டெடுப்பு

/

 ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டெடுப்பு

 ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டெடுப்பு

 ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டெடுப்பு


ADDED : பிப் 24, 2026 06:05 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: ''பழநி ஆயக்குடியில் ராமநாதபுர சமஸ்தான செப்பேடு கண்டெடுக்கப்பட்டதாக'' தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.

அவர் கூறியதாவது: முதலாம் முத்துராமலிங்க சேதுபதி வழக்கிய சிறப்பு பட்டயம் கண்டறியப்பட்டது. அதில் மதுரை ஆயோத்தி பட்டியைச் சேர்ந்த குடும்பர் வசம் இருந்து பட்டயம் பெறப்பட்டது.

ஓய்வு பெற்ற முதன்மை வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற முதன்மை தொல்லியல் அதிகாரி மூர்த்தீஸ்வரி உதவிடன் ஆய்வு செய்யப்பட்டது.

கி.பி., பதினெட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த செப்பு பட்டயம் மதுரை அரசு உரிமைப் போராட்டத்தில் திருமலை நாயக்கர் ஆகிய பங்காரு திருமலை வழங்கிய செப்பேடு என தெரியவந்தது. முத்துராமலிங்க சேதுபதி நோய்வாய் பட்டு இருந்த போது அங்குசால் முருககுடும்பன் நோயை குணப்படுத்தியது குறித்து உள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசர் இடக்கை வழக்கை பிரிவினர் வழக்கை தீர்த்து தர கேட்டார். அதன்படி முருகக் குடும்பன் வழக்கை தீர்த்து வைத்தார்.

இதனால் 12 லட்சம் பொற்காசுகளும் ஜாதி தலைவராகவும் நியமித்துள்ளார்.

இதனால் வீட்டுக்கு மூன்று பணமும் கல்யாணத்திற்கு இரண்டு பணமும் பண்டிகைகளுக்கு ஒரு கெடாவும் வழங்க பட்டயம் எழுதி தரப்பட்டுள்ளது. இதில் திருமலை நாயக்கர், முத்துராமலிங்க சேதுபதி கையொப்பமிட்டுள்ளனர்.

இதற்கு சாட்சியாக புதுக்கோட்டை தொண்டைமான் சிவத்தம்பி, திருபுவனம் பழனியாபிள்ளை, திருச்சுழிகை முத்து சேர்வை கையெழுத்திட்டுள்ளனர்.

செப்பட்டையம் 22 செ.மீ., உயரம்,13.5 செ.மீ., அகலம், 175 கிராமில் 52 வரிகளுடன் இரு பக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. தரவுகளின் படி கி.பி.1782 - கி.பி.1795 இடைப்பட்ட காலம் எனக்கணிக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us