/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'ஓசி' மின்சாரத்தில் ரேஷன் பொருள் சப்ளை
/
'ஓசி' மின்சாரத்தில் ரேஷன் பொருள் சப்ளை
ADDED : பிப் 21, 2025 06:26 AM
வடமதுரை: பிலாத்து வாலிசெட்டிபட்டியில் மக்கள் போராட்டம் எதிரொலியாக ரேஷன் கடை பயோ மெட்ரிக் இயந்திரத்திற்கு பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று பொருள் வினியோகம் நடந்தது.
பிலாத்து ஊராட்சி சார்பில் வாலிசெட்டிபட்டியில் கிராம சேவை மைய கட்டடம் உருவாக்கி புதுவாழ்வு திட்டத்திற்கு வழங்கினர். இதில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை 'டான்பெட்' கேபிள் நிறுவனம் செயல்படுகிறது. மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் ரேஷன் கடை மூட மக்கள் மறியல் நடத்தினர்.
இதை தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அருகில் இருந்து 'ஓசி' மின்சாரம் பெற்று ரேஷன் பொருள் சப்ளை நடந்தது. நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

