ADDED : மார் 01, 2026 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்தூர் மார்க்கெட் ரோடு இரண்டாவது வார்டு பகுதி மக்களின் நலன் கருதி அங்குள்ள பேரூராட்சி கட்டடத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்து ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
பேரூராட்சி தலைவர் மேகலா, பேரூர் தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் பூபதிமாரிமுத்து, காட்டுபாவா சேட், பன்னீர்செல்வம், கற்பகம், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

