/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரையில் ரேஷன் கடை திறப்பு
/
வடமதுரையில் ரேஷன் கடை திறப்பு
ADDED : பிப் 26, 2026 06:26 AM
வடமதுரை: வடமதுரை கா.புதுப்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
அப்போது அவர்,'' நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2021 வரை வேடசந்துார் தொகுதியில் 92 ரேஷன் கடைகளே இருந்தன. 2021ல் நான் எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்ற பின் கா.புதுப்பட்டியில் திறக்கப்பட்ட இந்த பகுதி நேர கடையுடன் சேர்த்து 74 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனை '' என்றார். காணப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பூமிகண்ணு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ, சுப்பையா, கதிரேசன் பங்கேற்றனர்.

