நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூலை 04, 2026 06:10 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் சி.இ.ஓ., அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட என்.எஸ்.எஸ்., ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. மாநில உதவி தொடர் அலுவலர் சவுந்திரராஜ் தலைமை வகித்தார். மூத்த திட்ட அலுவலர் சேதுராமன் முன்னிலை வகித்தார். 56 என்.எஸ்.எஸ்., திட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சியை துவக்கி வைத்த முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சுரேஷ்பாபு பேசுகையில், 'நமது குழந்தைகளிடம் மனிதநேயத்தை வளர்ப்பது மட்டும் இல்லாமல் சேவை மனப்பான்மையும் அவர்களுக்கு ஊட்டி பெருமைப்படுத்துங்கள்' என்றார்.
தொடர்ந்து போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பள்ளிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நடைமுறைகள், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு என்.எஸ்.எஸ்., திட்ட பணிகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டன.
