தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

முதுகலை ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி


UPDATED : ஜூன் 17, 2026 10:07 PM

ADDED : ஜூன் 17, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 10:07 PM ADDED : ஜூன் 17, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், தேர்ச்சி பெறாத பள்ளிகளை கணக்கிட்டு பின்தங்கிய மாணவர்களை உடனடி மறுதேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது. திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கதிரேசன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்கள் வீரமணி, விஜய், தீபா, ஜான்சன், அமிர்தாகவுரி பயிற்சி அளித்தனர்.

பழநி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப் பள்ளிகள்) கருணாநிதி துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கருத்தாளர்கள் பாஸ்கரன், சரோஜா, பாண்டிச்செல்வி, சசிக்குமார், செல்வராசு ஆகியோர் கற்பித்தல் முறைகள் குறித்து எடுத்துக்கூறினர்.

இரு இடங்களிலும் சுழற்சி முறையில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us