தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவன் இறப்பில் மர்மம் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவன் இறப்பில் மர்மம் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவன் இறப்பில் மர்மம் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 11, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை, செப்.12

மதுரை பள்ளி மாணவன் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள், பாளையம் ஊர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையம் பேரூராட்சி சாணிபட்டியை சேர்ந்தவர் மளிகை கடை உரிமையாளர் கருப்புசாமி மகன் தமிழ்செல்வன் 16. இவர் மதுரை அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். செப்.,6ல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றவர் வீடு திரும்பவில்லை. போலீசில் புகார் அளித்து தேடியபோது இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.

அவரது உடலை குடும்பத்தினர் இன்னும் பெறாத நிலையில் மாணவன் இறப்புக்கு நீதி வேண்டும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை என வலியுறுத்தி ஊராளி கவுண்டர் சங்க கூட்டமைப்பின் தலைவர் நாகராஜ் தலைமையில் உறவினர்கள், பொதுமக்கள் பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us