/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொன்முடியை அமைச்சர் பதவியிருந்து நீக்குங்க; வி.ஹெச்.பி., தென் தமிழ்நாடு தலைவர் ராமகிருஷ்ணன் சாடல்

ADDED : ஏப் 13, 2025 07:24 AM
பழநி : தி.மு.க., அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சை கண்டித்துள்ள தென் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ராமகிருஷ்ணன், '' பொன்முடியை அமைச்சர் பதவியிருந்து நீக்க வேண்டும் ''என தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை :தி.மு.க., அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சை வி.ஹெச்.பி., கண்டிக்கிறது. இதை கண்டித்து ஏப்., 15ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் .
தி.மு.க., நடத்திய நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி நுாற்றுக்கணக்கான பெண்கள் முன்னிலையில் பேசும் போது ஹிந்து சின்னங்களை இழிவுபடுத்தும் மலிவான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். இதை எந்த சமூகத்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது வெறும் கண்துடைப்பாக உள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.முதல்வரின் மனைவி துர்கா நெற்றியில் திருநீறு, குங்குமம் சூட்டிக் கொள்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பொன்முடி ஊடகங்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தி.மு.க., அரசு தொடர்ந்து ஹிந்துக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், பாரத குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதை சுட்டுக்காட்டும் வகையில் ஏப். 15ல் மாநிலம் முழுவதும் வி.ஹெச்.பி.,போராட்டங்களை நடத்துகிறது .
இதன் மூலம் ஹிந்துக்களின் கோபத்தை உணர முதல்வர் முயற்சிப்பார் என நம்புகிறேன். சிவ சம்பிரதாயம் , வைணவ சம்பிரதாயம் பற்றி வெறுப்பு பேச்சுக்காக பொன்முடி மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.